ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள்; தெலுங்கு வருடப்பிறப்பன்று அதிகாரபூர்வ அறிவிப்பு எனத் தகவல்!

  • 5

ஆந்திராவில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கையை 13-லிருந்து 26 ஆக அதிகரிக்க அந்த மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது.

ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு வகையான புதிய திட்டங்களை அந்த மாநிலத்தில் செயல்படுத்திவருகிறார். ஆந்திராவில் நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் புதிதாக உருவாக இருக்கும் 13 புதிய மாவட்டங்கள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

ஜெகன் மோகன் ரெட்டி

ஏற்கெனவே 13 மாவட்டங்கள் இருக்கின்ற நிலையில், தற்போது புதிதாக 13 மாவட்டங்கள் மாநிலத்தில் உருவாக்க இருக்கின்றன. அதில் கிருஷ்ணா மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, என்.டி.ஆர் மாவட்டம் என புதிய மாவட்டத்தை உருவாக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

அறிக்கை

ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதியையும் ஒரு மாவட்டமாக உருவாக்க வேண்டும் என ஜெகன்மோகன் ரெட்டி திட்டம் தீட்டியிருந்த நிலையில், தற்போது புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட இருக்கின்றன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தெலுங்கு வருடப் பிறப்பு அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அண்மையில் ஒரு மாவட்டத்துக்கு ஒரு விமான நிலையம் என்ற திட்டத்தை ஆந்திர அரசு நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஆந்திரா: `ஒரு மாவட்டம்… ஒரு விமான நிலையம்’ – ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி!

AIARA

🔊 Listen to this ஆந்திராவில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கையை 13-லிருந்து 26 ஆக அதிகரிக்க அந்த மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு வகையான புதிய திட்டங்களை அந்த மாநிலத்தில் செயல்படுத்திவருகிறார். ஆந்திராவில் நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் புதிதாக உருவாக இருக்கும் 13 புதிய…

Leave a Reply

Your email address will not be published.