ஆண்களுக்கு மட்டும் கறிசோறு; பிரியாணி பிரசாதம்; மது படையல் – மதுரையில் நடைபெறும் விநோத திருவிழாக்கள்!

  • 9

சமீபத்தில் திருமங்கலம் அருகே ஆயிரக்கணக்கான ஆண்கள் மட்டும் கலந்துகொண்ட கறிசோறு கோயில் திருவிழாவைப்பற்றி பலரும் ஆச்சர்யமாகப் பேசுகிறார்கள். இது மட்டுமல்ல, இதுபோன்ற இன்னும் அதிகமான விநோத சடங்குகளுடன் கூடிய கோயில் திருவிழாக்கள் மதுரையிலும், தென் மாவட்டங்களிலும் அதிகம்.

தென் மாவட்டத்தில் திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லை. இந்த மாதத்தில் தங்களைக் காக்கும் சாமிகளுக்கு மக்கள் நன்றி செலுத்துகிற விநோதமான திருவிழாக்கள் மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் நடைபெறும்.

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்

1) கள்ளிக்குடி வட்டாரத்தில் வடக்கம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் நாடு முழுவதும் முனியாண்டி விலாஸ் உள்ளிட்ட அசைவ ஹோட்டல்கள் நடத்துபவர்கள், ஆண்டுக்கொருமுறை முனியாண்டி கோயிலில் விழா எடுத்து நூற்றுக்கணக்கான ஆடு, கோழிகளை வெட்டி டன் கணக்கில் பிரியாணி தயார் செய்து அதையே உள்ளூர் வெளியூர் மக்களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள்.

2) மேலூர் பகுதியில் குறிப்பிட்ட கிராமங்களில் 60 நாள்களுக்கு அசைவம் சாப்பிடாமால், சைவம் சமைத்தாலும் குழம்பு தாளிக்காமல், புதிய வேலைகளைத் தொடங்காமல் விரதம் இருப்பார்கள். 7 பெண் குழந்தைகளை தெய்வங்களாகக் கருதி விரதமிருந்து திருவிழா கொண்டாடுவார்கள்.

வெள்ளலூர் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா

3) மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி பகுதியில் உள்ள சில சிறு கோயில்களில் மது பாட்டிலைப் படையலிட்டு விழா நடத்துவார்கள்.

4) தேனி மாவட்டம் குச்சனூர் கருப்பசாமி கோயிலிலும் மது பாட்டில்களைப் படையலிட்டு நேர்த்திக்கடனை மக்கள் முடிப்பார்கள்.

5) மேலூர் நரசிங்கப்பட்டியில் விவசாயம் செழிக்க கண்மாய் மணலை எடுத்து அதனுடன் உப்பு மிளகு கலந்து மலை மீது கொட்டுவதை விழாவாகக் கொண்டாடுவார்கள்.

கமுதி சேத்தாண்டி திருவிழா

6) மதுரைக்கு அருகிலுள்ள ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நள்ளிரவில் 101 ஆடுகளை பலியிட்டு சமைத்து சாமிக்குப் படைத்து ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு உண்பார்கள்.

7) அதே கமுதியில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கலின்போது மக்கள் பல்வேறு நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள். அதில் முக்கியமானது சேற்றை உடலில் பூசிக்கொண்டு பக்தர்கள் வேப்பிலையுடன் கோயிலுக்கு ஊர்வலமாக வருவதுதான். அம்மை உள்ளிட்ட தோல் நோய்களிலிருந்து காத்தருள 300 வருடங்களாக இந்தச் சடங்கை இப்பகுதி மக்கள் செய்து வருவதாகச் சொல்கிறார்கள்.

இப்படிப் பல ஊர்களிலும் நடைபெறும் பலவிதமான விநோதமான சடங்குகள் கொண்ட விழாக்களில் முக்கியமானதுதான் அனுப்பட்டியில் ஆண்கள் மட்டும் கலந்துகொள்ளும் கறிசோறு விழா. இதுதான் சமீபத்திய வைரல்.கறிசோறு தயாராகிறது

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது அனுப்பபட்டி கிராமம். இதைச் சுற்றியுள்ள பல கிராம மக்களுக்குக் காவல் தெய்வமாகக் காலதெய்வம் கருப்பையா முத்தையா கோயில் உள்ளது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடத்தப்படும் திருவிழா அனைவராலும் ஆச்சர்யமாகப் பார்க்கப்படும். காரணம், அதில் ஆண்கள் மட்டும் கலந்துகொண்டு பிரமாண்டமான முறையில் கறி சோறு தயாரித்து ஆயிரக்கணக்கான பேருக்கு பந்தி வைக்கப்படுவதுதான்.

இவ்விழாவில் பெண்கள் கலந்துகொள்ளாததற்கு நம்பிக்கை அடிப்படையில் சில கதைகளை கூறுகிறார்கள்.

அந்த விழாவில் நடந்தவை இவைதான்…

திருவிழாவில் கோயிலுக்கு நேர்ந்து விடபட்ட ஆட்டுக் கிடாய்கள் வெட்டப்பட்டு அவை குழம்பாகச் சமைக்கப்பட்டன. அதன் பின் பல மூட்டை அரிசி சோறு வடிக்கப்பட்டது.

டன் கணக்கில் வடிக்கப்பட்ட சோறு

பின்பு கறி சோறு சாமிக்குப் படைக்கப்பட்டு பூஜைகள் செய்தனர். கோயில் முன் உள்ள பெரிய மைதானத்தில வந்திருந்த ஆயிரக்கணக்கான பேர், அமர வைக்கப்பட்டு வாழை இலை விரித்துப் பந்தி வைக்கப்பட்டது.

இந்த விருந்தில் சாப்பிட்டவர்கள் யாரும் இலையை எடுக்கக் கூடாது. அது அப்படியே அங்கேயே கிடந்து காய வேண்டுமென்பது நம்பிக்கை. அந்த இலைகள் காய்ந்து சருகான பிறகுதான் பெண்கள் அப்பகுதிக்குச் செல்ல முடியும் என்கிறார்கள்.

இந்த விழாவில் கரடிக்கல், செக்கானூரணி, மேலஉரப்பனூர் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் கலந்துகொண்டனர்.

எதிலும் வித்தியாசம் காட்டும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டக்காரர்கள் கோயில் திருவிழாவிலும் விநோத நம்பிக்கைகளுடன் ஆச்சரியப்படுத்துகிறார்கள்.

AIARA

🔊 Listen to this சமீபத்தில் திருமங்கலம் அருகே ஆயிரக்கணக்கான ஆண்கள் மட்டும் கலந்துகொண்ட கறிசோறு கோயில் திருவிழாவைப்பற்றி பலரும் ஆச்சர்யமாகப் பேசுகிறார்கள். இது மட்டுமல்ல, இதுபோன்ற இன்னும் அதிகமான விநோத சடங்குகளுடன் கூடிய கோயில் திருவிழாக்கள் மதுரையிலும், தென் மாவட்டங்களிலும் அதிகம். தென் மாவட்டத்தில் திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லை. இந்த மாதத்தில் தங்களைக் காக்கும் சாமிகளுக்கு மக்கள் நன்றி செலுத்துகிற விநோதமான திருவிழாக்கள் மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் நடைபெறும். மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் 1) கள்ளிக்குடி…

AIARA

🔊 Listen to this சமீபத்தில் திருமங்கலம் அருகே ஆயிரக்கணக்கான ஆண்கள் மட்டும் கலந்துகொண்ட கறிசோறு கோயில் திருவிழாவைப்பற்றி பலரும் ஆச்சர்யமாகப் பேசுகிறார்கள். இது மட்டுமல்ல, இதுபோன்ற இன்னும் அதிகமான விநோத சடங்குகளுடன் கூடிய கோயில் திருவிழாக்கள் மதுரையிலும், தென் மாவட்டங்களிலும் அதிகம். தென் மாவட்டத்தில் திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லை. இந்த மாதத்தில் தங்களைக் காக்கும் சாமிகளுக்கு மக்கள் நன்றி செலுத்துகிற விநோதமான திருவிழாக்கள் மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் நடைபெறும். மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் 1) கள்ளிக்குடி…

Leave a Reply

Your email address will not be published.