அரக்கோணம்: `வீச்சரிவாள், துப்பாக்கியுடன் புகுந்த கும்பல்!’ -தீரன் பட பாணியில் நள்ளிரவில் கொள்ளை

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலிருக்கும் செய்யூர் கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்கரன். இவர், தனது தாய் சுதா, பெரியம்மாள் லதா, பாட்டி ரஞ்சிதா ஆகியோருடன் தனது விவசாய நிலத்திலேயே வீடு கட்டி வசித்துவருகிறார். புஷ்கரனின் பெரியம்மாள் மகன் சென்னையில் தங்கி வேலைச் செய்கிறார். இந்த நிலையில், நள்ளிரவு 12 மணியளவில், புஷ்கரனின் வீட்டுக் கதவை வேகமாக யாரோ தட்டியிருக்கிறார்கள். ‘சென்னையிலிருந்து பெரியம்மாள் மகன்தான் வந்திருக்கிறாரோ?’ என்று நினைத்து, கதவைத் திறக்க முயன்றுள்ளார்.

அரக்கோணம்

அப்போது, சிலர் பெரிய வீச்சரிவாளுடன் வெளியில் நிற்பதைப் பார்த்து, உடனே கதவை மூடியிருக்கிறார். அவர் அலறியதில் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த தாய், பெரியம்மாள், பாட்டி ஆகியோரும் பதறியடித்து விழித்துக்கொண்டனர். வெளியிலிருந்த கும்பல் வீச்சரிவாளால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது. நான்குப் பேரையும் வீச்சரிவாளால் வெட்டியதுடன் நாட்டுத் துப்பாக்கியாலும் சுட்டுள்ளனர். இதில் நால்வரும் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து, பெண்கள் அணிந்திருந்த கம்மல், செயின் மற்றும் பீரோவிலிருந்த நகைகள் என மொத்தம் 25 பவுன் நகைகளையும், நாற்பதாயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்த கும்பல், தாங்கள் வந்துச்சென்ற தடயங்களை மறைப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடியைத் தூவியுள்ளனர். மேலும், புஷ்கரன் குடும்பத்தினரை வீச்சரிவாள் முனையில், ‘‘நாங்கள் மீண்டும் வருவோம். போலீஸுடம் சொன்னால் கொலைச் செய்துவிடுவோம்’’ என்று மிரட்டிவிட்டு அவர்களிடமிருந்த செல்போன்களையும் பறித்துச் சென்றுள்ளனர்.

படுகாயமடைந்தவர்

படுகாயமடைந்தவர்கள் ஒருவழியாக அரக்கோணம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து சேர்ந்தனர். மருத்துவமனையிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து, அரக்கோணம் நகரப் போலீஸார் விரைந்துச் சென்று விசாரணை நடத்தியபோது, மேற்கண்ட தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதையடுத்து, நால்வரும் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தைச் சென்று பார்வையிட்ட போலீஸார், ‘தீரன்’ பட பாணியில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவருகிறார்கள்.

🔊 Listen to this ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலிருக்கும் செய்யூர் கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்கரன். இவர், தனது தாய் சுதா, பெரியம்மாள் லதா, பாட்டி ரஞ்சிதா ஆகியோருடன் தனது விவசாய நிலத்திலேயே வீடு கட்டி வசித்துவருகிறார். புஷ்கரனின் பெரியம்மாள் மகன் சென்னையில் தங்கி வேலைச் செய்கிறார். இந்த நிலையில், நள்ளிரவு 12 மணியளவில், புஷ்கரனின் வீட்டுக் கதவை வேகமாக யாரோ தட்டியிருக்கிறார்கள். ‘சென்னையிலிருந்து பெரியம்மாள் மகன்தான் வந்திருக்கிறாரோ?’ என்று நினைத்து, கதவைத் திறக்க முயன்றுள்ளார்.…