அமெரிக்கா: நெஞ்சை ரணமாக்கும் அழுகுரல்கள்… சூறாவளியில் சிக்கி நிலைகுலைந்த கென்டக்கி நகரம்!

அமெரிக்காவின் கென்டக்கி நகரத்திலிருக்கும் குறு நகரமான மேஃபீல்டு, நேற்று வீசிய பலத்த தொடர் சூறாவளிக் காற்றில் நிலைகுலைந்து போனது. ஆறு மாநிலங்களைக் கடந்து வீசிய சூறாவளியால் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மேஃபீல்டில், உள்ளூரின் அடையாளமாக இருந்த பழைய செங்கல் கட்டடங்கள் சூறாவளிக் காற்றில் விழுந்தன. நகர நீதிமன்றத்தின் மேற்கூரையின் ஒரு பகுதியும் சேதமடைந்தது. மேலும், இரண்டு தேவாலயங்கள் சேதமடைந்தன.

சூறாவளி

கடந்த வெள்ளிக்கிழமை மாலையே சூறாவளி எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், அந்த நகர மக்கள் இந்த அளவுக்குச் சேதத்தைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நகரத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு மெழுகுவர்த்தி ஆலை சூறாவளிக் காற்றில் இடிந்து விழுந்ததில், அதில் பணியாற்றிய சுமார் 100 பணியாளர்கள் தப்பிக்க முடியாமல் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 40 பணியாளர்களை மீட்புப் குழுவினர் மீட்ட நிலையில் , “இனி யாரையும் மீட்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல” என்று கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷார் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

இல்லினாஸ் நகரத்திலிருக்கும் அமேசான் நிறுவனத்தின் கிடங்கில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் இறந்து விட்டதாகவும், 45-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அமேசான் நிறுவனத்தின் உலகளாவிய நுகர்வோர் தலைமை நிர்வாக அதிகாரி டேவ் கிளார்க், நிகழ்ந்த பாதிப்புகளுக்கு வருத்தம் தெரிவிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

தன்னார்வலர்கள் முன்வந்து தண்ணீர், உணவு, துணிகள் போன்றவற்றைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி உதவி வருகின்றனர்.

சூறாவளி

வீடுகள், வாகனங்கள், உணவகங்கள், கடைகள் என அனைத்தும் சேதமடைந்திருப்பதால், நகரத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பாதிப்புகள் குறித்து அந்தப் பகுதி மக்கள் ஊடகங்களிடம் கூறுகையில், “எங்களின் உடைமைகள், வீடுகள், வாகனங்கள் என அனைத்தையும் இழந்துவிட்டு நிர்க்கதியாக நிற்கிறோம். எங்கள் உயிரும், எங்களைச் சார்ந்தவர்களின் உயிரும் மிஞ்சியிருப்பது தான் ஒரே ஆறுதலான விஷயம்” என்று வருத்தம் தெரிவித்தனர்.

சூறாவளி

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேட்டியளித்த அதிபர் ஜோ பைடன், “பாதிப்படைந்த இடங்களைக் கண்காணித்து வருகிறோம். நிலைமையைச் சீர்செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். பாதிப்படைந்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யப்போகிறேன்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், கென்டக்கி நகரத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.

– மாணவப் பத்திரிகையாளர்

AIARA

🔊 Listen to this அமெரிக்காவின் கென்டக்கி நகரத்திலிருக்கும் குறு நகரமான மேஃபீல்டு, நேற்று வீசிய பலத்த தொடர் சூறாவளிக் காற்றில் நிலைகுலைந்து போனது. ஆறு மாநிலங்களைக் கடந்து வீசிய சூறாவளியால் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மேஃபீல்டில், உள்ளூரின் அடையாளமாக இருந்த பழைய செங்கல் கட்டடங்கள் சூறாவளிக் காற்றில் விழுந்தன. நகர நீதிமன்றத்தின் மேற்கூரையின் ஒரு பகுதியும் சேதமடைந்தது. மேலும், இரண்டு தேவாலயங்கள் சேதமடைந்தன. சூறாவளி கடந்த வெள்ளிக்கிழமை…