அமெரிக்கா : ஒரே ஒரு ஃபேஸ்புக் பதிவினால் ஏழு லட்ச ரூபாய் டிப்ஸ் பெற்ற உணவக ஊழியர்!

வழக்கமாக உணவகம் சென்று சாப்பிட்டால் அந்த உணவை சப்ளை செய்யும் சப்ளையருக்கு டிப்ஸ் கொடுப்பதை நாம் பார்த்திருப்போம். சமயங்களில் கொடுத்தும் இருப்போம். அந்த டிப்ஸ் குறைந்தபட்சம் பத்து ரூபாய் முதல் பில் தொகைக்கு ஏற்ப மாறும். ஆனால் அமெரிக்காவின் அட்லாண்டாவில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில் பணியாற்றி வரும் ஜாஸ்மின் காஸ்டில்லோ என்ற பெண் ஊழியர் ஏழு லட்ச ரூபாயை டிப்ஸாக பெற்றுள்ளார். 

<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fritafashionicon%2Fposts%2F10104606153373961&show_text=true&width=500″ width=”500″ height=”545″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>

அவர் அந்த டிப்ஸ் தொகையை பெற காரணம் ரீட்டா ரோஸ் என்ற கஸ்டமர். தங்கமான மனசு படைத்த அந்த வாடிக்கையாளர், தனக்கு உணவு சப்ளை செய்த ஜாஸ்மினுக்கு 20 அமெரிக்க டாலர்களை டிப்ஸாக கொடுத்துள்ளார். ரோஸ் அட்லாண்டாவில் இயங்கி வரும் IHOP உணவகத்தில் தனது அம்மாவுடன் வந்து உணவருந்தி உள்ளார். அவர்கள் சாப்பிட்ட உணவுக்கான பில் தொகை 30 அமெரிக்க டாலர்கள். இந்த நிலையில்தான் 20 டாலர்களை எடுத்து ஜாஸ்மினுக்கு டிப்ஸாக கொடுத்துள்ளார் அவர். 

அதோடு ஜாஸ்மின் குறித்து தெரிந்து கொண்ட அவர், அதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். “நானும், எனது அம்மாவும் IHOP உணவகம் சென்றிருந்தோம். அங்கு எங்களுக்கு உணவு பரிமாறும் பணியை கவனித்த ஜாஸ்மின், மிக சிறப்பாக அவரது பணியை செய்தார். மிகவும் கனிவாக தனது பணியை கவனித்த அவர், பொறுமையுடன் உணவு பரிமாறினார். அதே நேரத்தில் அவரது தொழில்முறை நேர்த்தியில் இருந்தும் அவர் தவறவில்லை. அதற்காக அவருக்கு 20 அமெரிக்க டாலர்கள் டிப்ஸ் கொடுத்திருந்தேன். 

<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fritafashionicon%2Fposts%2F10104608864865111&show_text=true&width=500″ width=”500″ height=”609″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>

அதை பெற்றுக்கொண்ட அவர் இந்த 20 அமெரிக்க டாலர்கள் தனக்கான பெரிய உதவி என சொல்லி இருந்தார். இந்த பணியை செய்ய அவருக்கு விருப்பம் இல்லை என்றாலும் தனது குழந்தைக்காகவும், குடும்பத்திற்காகவும் அவர் இந்த பணியை செய்து வருகிறார் என அறிந்து கொண்டேன். உங்களால் முடிந்தால் உதவி செய்யுங்கள்” என அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார் அவர். 

அந்த பதிவை படித்த சக ஃபேஸ்புக் பயனர்கள் ஜாஸ்மினின் ‘கேஷ் அப்’ செயலிக்கு அமெரிக்க டாலர்களை அனுப்ப தொடங்கியுள்ளனர். ரோஸ், ஜாஸ்மினின் ‘கேஷ் அப்’ விவரங்களை அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். அதை பயன்படுத்தி பயனர்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்துள்ளனர்.  

image

ஒன்று, இரண்டு என தொடங்கிய கணக்கு தற்போது சுமார் பத்தாயிரம் அமெரிக்க டாலர்களை கடந்துள்ளதாம். 

“எனது போனில் உள்ள ‘கேஷ் அப்’ செயலியின் ரிங்டோன் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. உதவிய அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார் ஜாஸ்மின். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

AIARA

🔊 Listen to this வழக்கமாக உணவகம் சென்று சாப்பிட்டால் அந்த உணவை சப்ளை செய்யும் சப்ளையருக்கு டிப்ஸ் கொடுப்பதை நாம் பார்த்திருப்போம். சமயங்களில் கொடுத்தும் இருப்போம். அந்த டிப்ஸ் குறைந்தபட்சம் பத்து ரூபாய் முதல் பில் தொகைக்கு ஏற்ப மாறும். ஆனால் அமெரிக்காவின் அட்லாண்டாவில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில் பணியாற்றி வரும் ஜாஸ்மின் காஸ்டில்லோ என்ற பெண் ஊழியர் ஏழு லட்ச ரூபாயை டிப்ஸாக பெற்றுள்ளார்.  <iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fritafashionicon%2Fposts%2F10104606153373961&show_text=true&width=500″ width=”500″ height=”545″ style=”border:none;overflow:hidden” scrolling=”no”…

AIARA

🔊 Listen to this வழக்கமாக உணவகம் சென்று சாப்பிட்டால் அந்த உணவை சப்ளை செய்யும் சப்ளையருக்கு டிப்ஸ் கொடுப்பதை நாம் பார்த்திருப்போம். சமயங்களில் கொடுத்தும் இருப்போம். அந்த டிப்ஸ் குறைந்தபட்சம் பத்து ரூபாய் முதல் பில் தொகைக்கு ஏற்ப மாறும். ஆனால் அமெரிக்காவின் அட்லாண்டாவில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில் பணியாற்றி வரும் ஜாஸ்மின் காஸ்டில்லோ என்ற பெண் ஊழியர் ஏழு லட்ச ரூபாயை டிப்ஸாக பெற்றுள்ளார்.  <iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fritafashionicon%2Fposts%2F10104606153373961&show_text=true&width=500″ width=”500″ height=”545″ style=”border:none;overflow:hidden” scrolling=”no”…