அமெரிக்காவுக்கு செல்லவிருந்த ஏர்இந்தியா விமானங்கள் தற்காலிக நிறுத்தம்; காரணம் என்ன?

  • 5

அமெரிக்காவின் பெரும்பகுதிகளில் 5ஜி இணைய சேவை தொடங்கப்பட இருந்த நிலையில் அலைகற்றைகளால் விமான சேவை பாதிக்கும் என விமான நிறுவனங்கள் முன்பு குற்றம் சாட்டியிருந்தன. விமானத்தின் அதிநவீன நுண்ணுணர்வு பாதுகாப்பு கருவிகளுக்கு சேதம் ஏற்படலாம் எனவும் தரையிறங்கும் முறைமைக்கு மாறுவதில் சிக்கல் ஏற்படலாம் எனவும் எச்சரித்து கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 5ஜி சேவை வழங்கும் நிறுவனங்களான ஏடி&டி மற்றும் வெரிஸோன் நிறுவனங்கள் விமான ஓடுதளங்களுக்கு அருகே உள்ள செல்போன் டவர்களை இயக்காமல் நிறுத்தி வைக்க ஒப்புக் கொண்டுள்ளனர். அதை தவிர்த்த 90 சதவீத 5ஜி டவர்கள் இயங்கவுள்ளன.

5ஜி

விமானங்களில் பயன்படுத்தப்படும் அல்டிமீட்டர் மற்றும் அதிஉயர் நுண்ணணர்வு கொண்ட கருவிகள் 5ஜி அலைகளால் செயலிழக்கும் அபாயம் இருப்பதால் விமானங்கள் தாமதிக்கவும் விமான போக்குவரத்து ரத்து செய்யப்படவும் தள்ளிவைக்கவும் வாய்ப்பு இருக்கிறது என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர். ஏற்கனவே 40க்கும் அதிகமான நாடுகளில் 5ஜி சி-பேன்ட் (C -Band) எந்தவித விமான சேவையிலும் குறுக்கீடு இல்லாமல் இயங்கி வருவதை ஏடி&டி மற்றும் வெரிஸோன் நிறுவனங்கள் சுட்டி காட்டுகின்றனர். இருப்பினும் பயணிகள் போக்குவரத்து, சரக்கு பரிமாற்றம், நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்டவை பாதிக்கப்படாமல் இருக்க விமானத்தளங்களுக்கு அருகில் உள்ள டவர்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஏர்இந்தியா வெளியிட்ட குறிப்பில், “அமெரிக்காவில் 5ஜி சேவை நடைமுறைக்கு வருவதால், அமெரிக்காவிற்கு இயக்கப்படும் எங்களது பயண சேவை 19 ஆம் தேதி முதல் குறைக்கப்படலாம் அல்லது மாற்றியமைக்கப்படலாம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அவற்றில் எந்த விமான சேவைகள் இயங்காது என ஏர் இந்தியாவின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏர்இந்தியா

AIARA

🔊 Listen to this அமெரிக்காவின் பெரும்பகுதிகளில் 5ஜி இணைய சேவை தொடங்கப்பட இருந்த நிலையில் அலைகற்றைகளால் விமான சேவை பாதிக்கும் என விமான நிறுவனங்கள் முன்பு குற்றம் சாட்டியிருந்தன. விமானத்தின் அதிநவீன நுண்ணுணர்வு பாதுகாப்பு கருவிகளுக்கு சேதம் ஏற்படலாம் எனவும் தரையிறங்கும் முறைமைக்கு மாறுவதில் சிக்கல் ஏற்படலாம் எனவும் எச்சரித்து கடிதம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 5ஜி சேவை வழங்கும் நிறுவனங்களான ஏடி&டி மற்றும் வெரிஸோன் நிறுவனங்கள்…

Leave a Reply

Your email address will not be published.