“அனைத்து கிராமங்களிலும் கோமாரி தடுப்பூசி முகாம் வேண்டும்!” – வலியுறுத்தும் விவசாயிகள்
காவிரி டெல்டா மாவட்டங்களின் அனைத்து கிராமங்களிலும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துவதற்கான முகாம்களை நடத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளார்கள்.
விவசாயிகள் போராட்டம்
Also Read: அதிகரிக்கும் தெருநாய் தொல்லை; சாலையில் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள், கடந்த நவம்பர் முதல் வாரத்தில் பெய்த தொடர் கனமழையாலும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1,2 ஆகிய தேதிகளில் பெய்த பருவம் தவறிய பெருமழையாலும் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தது. இதற்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி, டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஏற்பாட்டில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து பேசும் இச்சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள், “சமீபத்தில் பெய்த கன மழையால் தஞ்சாவூர், திருவாரூர், மாவட்டங்களில் விளைநிலங்கள் மூழ்கி பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர். எனவே பயிர்களை இழந்துள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும். மழை பாதிப்பால் வேலைவாய்ப்பை இழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும். மழை, வெள்ளத்தால் வீடுகள் இடிந்தும் வேறு சில அசம்பாவிதங்களாலும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். பலத்த மழையால் ஆடு, மாடுகளை இழந்த விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
கால்நடை
Also Read: கோமாரி நோய் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; அல்லல்படும் விவசாயிகள்; நடவடிக்கை எடுக்குமா அரசு?
இது தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும். மழை மற்றும் பனிகாலத்தில்தான் மாடுகளுக்கு அதிகளவில் கோமாரி நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் தற்போது இதிலிருந்து கால்நடைகளை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படாமல் இருக்கிறது. எனவே கால்நடைகளை பாதுகாக்க அனைத்து கிராமங்களிலும் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமை உடனடியாக நடத்த வேண்டும்” என பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.

🔊 Listen to this காவிரி டெல்டா மாவட்டங்களின் அனைத்து கிராமங்களிலும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துவதற்கான முகாம்களை நடத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளார்கள். விவசாயிகள் போராட்டம் Also Read: அதிகரிக்கும் தெருநாய் தொல்லை; சாலையில் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்! தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள், கடந்த நவம்பர் முதல் வாரத்தில் பெய்த தொடர் கனமழையாலும் டிசம்பர் 31…