அனுமதியை மறுத்தாலும் Location Data-வை சேகரிக்கிறார்கள், கூகுள் மீது தொடரப்பட்ட வழக்கு! பின்னணி என்ன?

  • 28

பயனர்களின் இருப்பிடத் தகவல்களை அவர்களின் தடையையும் மீறி கூகுள் சேகரிப்பதாகக் கூறி கூகுள் நிறுவனத்தின் மீது அமெரிக்க மாநிலங்களின் நான்கு அட்டர்னி ஜெனரல்கள் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.

நம்முடைய மொபைலில் எந்தெந்த செயலிகள் எந்தெந்த தரவுகளைச் சேகரிக்கலாம் என பயனர்களாகிய நாம் கட்டுப்படுத்தும் உரிமை நமக்கு இருக்கிறது. Camera, Location, Microphone, Storage மற்றும் Contacts ஆகியவற்றைச் சேவைகள் பயன்படுத்த வேண்டும் என்றால் பயனர்கள் அனுமதி அளிக்க வேண்டும். தங்களுடைய மொபைலில் குறிப்பிட்ட தரவை குறிப்பிட்ட செயலியானது பயன்படுத்தக்கூடாது என அனுமதியை மறுக்கும் பட்சத்தில் அவற்றை அந்தக் குறிப்பிட்ட செயலி பயன்படுத்த முடியாது. இப்படித்தான் இது வரை பயனர்களுடைய தகவல்கள் பயனர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்பட்டு வருகிறது.

கூகுள்

இந்த நிலையில் தான் கூகுளின் மேல் இப்படி ஒரு வழக்கைத் தொடர்ந்திருக்கிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த நான்கு அட்டர்னி ஜெனரல்கள். அதாவது, நாம் எங்கே இருக்கிறோம், எங்கே செல்கிறோம் என்ற தரவுகளைக் கொண்டிருக்கும் Location data-வை கூகுள் சேகரிக்கக் கூடாது என நாம் நம்முடைய மொபைலில் அனுமதியை மறுத்திருந்தாலும் கூகுள் அதனைத் தொடர்ந்து சேகரிப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்கள் அட்டர்னி ஜெனரல்கள். அதாவது, Location data-வுக்கான அனுமதியைக் கூகுளுக்கு நாம் கொடுத்திருந்தாலும் சரி, மறுத்திருந்தாலும் சரி, கூகுள் நம்முடைய இருப்பிடத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டு தான் இருக்கிறதாம். இந்தத் தரவுகளை வைத்துக் கொண்டு டார்கெட்டட் விளம்பரங்களைத் தங்களுடைய பயனர்களுக்குக் காட்டி கூகுள் வருமானம் ஈட்டுவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

Also Read: ட்விட்டரின் புதிய அப்டேட், எரிச்சலான எலான் மஸ்க்!

கூகுள் மேப்இது குறித்து அந்த நான்கு அட்டர்னி ஜெனரல்களில் ஒருவரான கார்ல் ரேசின் கூறுகையில், “தங்களுடைய தகவல்கள் தங்களுடைய கட்டுப்பாட்டில் இருப்பதாகப் பயனர்களை நம்ப வைத்து ஏமாற்றியிருக்கிறது கூகுள். பயனர்களுக்குத் தெரியாமல் அவர்களுடைய தரவுகளைச் சேகரித்து அதனை வைத்து வருமானம் ஈட்டிக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முழுமையாக மறுத்திருக்கிறது கூகுள் தரப்பு. மேலும் இது குறித்து கூகுள் தரப்பில் இருந்து பேசிய போது, “தவறான தகவல்களைக் கொண்டு கூகுள் மீது இந்த வழக்கைத் தொடர்ந்திருக்கிறார்கள். பயனர்களுக்கு முழுமையான தனியுரிமை வசதிகளையும், அவர்களுடைய தரவுகள் மீது முழுமையான கட்டுப்பாட்டையும் கூகுள் அளித்திருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

AIARA

🔊 Listen to this பயனர்களின் இருப்பிடத் தகவல்களை அவர்களின் தடையையும் மீறி கூகுள் சேகரிப்பதாகக் கூறி கூகுள் நிறுவனத்தின் மீது அமெரிக்க மாநிலங்களின் நான்கு அட்டர்னி ஜெனரல்கள் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். நம்முடைய மொபைலில் எந்தெந்த செயலிகள் எந்தெந்த தரவுகளைச் சேகரிக்கலாம் என பயனர்களாகிய நாம் கட்டுப்படுத்தும் உரிமை நமக்கு இருக்கிறது. Camera, Location, Microphone, Storage மற்றும் Contacts ஆகியவற்றைச் சேவைகள் பயன்படுத்த வேண்டும் என்றால் பயனர்கள் அனுமதி அளிக்க வேண்டும். தங்களுடைய மொபைலில் குறிப்பிட்ட…

AIARA

🔊 Listen to this பயனர்களின் இருப்பிடத் தகவல்களை அவர்களின் தடையையும் மீறி கூகுள் சேகரிப்பதாகக் கூறி கூகுள் நிறுவனத்தின் மீது அமெரிக்க மாநிலங்களின் நான்கு அட்டர்னி ஜெனரல்கள் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். நம்முடைய மொபைலில் எந்தெந்த செயலிகள் எந்தெந்த தரவுகளைச் சேகரிக்கலாம் என பயனர்களாகிய நாம் கட்டுப்படுத்தும் உரிமை நமக்கு இருக்கிறது. Camera, Location, Microphone, Storage மற்றும் Contacts ஆகியவற்றைச் சேவைகள் பயன்படுத்த வேண்டும் என்றால் பயனர்கள் அனுமதி அளிக்க வேண்டும். தங்களுடைய மொபைலில் குறிப்பிட்ட…

Leave a Reply

Your email address will not be published.