அடிலெய்டு  டென்னிஸ் 2வது சுற்றில் சானியா ஜோடி போபண்ணா – ராம்குமார் முன்னேற்றம்

அடிலெய்டு டென்னிஸ் 2வது சுற்றில் சானியா ஜோடி போபண்ணா – ராம்குமார் முன்னேற்றம்

  • 5

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்டு  சர்வதேச டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட இந்தியாவின் சானியா மிர்சா – நடியா கிச்சனோக் ஜோடி தகுதி பெற்றுள்ளது. முதல் சுற்றில்   கனடாவின் கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி – கியுலியானா ஒல்மோஸ் (மெக்சிகோ) இணையுடன் மோதிய சானியா ஜோடி 1-6, 6-3, 10-8 என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி  வென்று 2வது சுற்றுக்கு முன்னேறியது. விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 9 நிமிடத்துக்கு நீடித்தது. 2ம் நிலை ஜோடியை அதிர்ச்சி தோல்வியடைய வைத்துள்ளதால், இத்தொடரில் சானியா ஜோடி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் (போலந்து), கோகோ காப், சோபியா கெனின், ஷெல்பி ரோஜர்ஸ் (அமெரிக்கா), விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்) ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.இதே தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்கிய இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் – ரோகன் போபண்ணா ஜோடி  6-2, 6-1 என நேர் செட்களில்  ஜெமி செர்ரேடனி (அமெரிக்கா) – பெர்னாண்டோ ராம்போலி (பிரசேில்) இணையை வீழ்த்தி 2வது சுற்றுக்கு தகுதி பெற்றது.

🔊 Listen to this அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்டு  சர்வதேச டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட இந்தியாவின் சானியா மிர்சா – நடியா கிச்சனோக் ஜோடி தகுதி பெற்றுள்ளது. முதல் சுற்றில்   கனடாவின் கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி – கியுலியானா ஒல்மோஸ் (மெக்சிகோ) இணையுடன் மோதிய சானியா ஜோடி 1-6, 6-3, 10-8 என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி  வென்று 2வது சுற்றுக்கு முன்னேறியது. விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *