அடிலெய்டு டென்னிஸ்: லெய்லா முன்னேற்றம்

அடிலெய்டு டென்னிஸ்: லெய்லா முன்னேற்றம்

  • 4

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்டு  சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியின் 2வது சுற்றில் விளையாட, கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் தகுதி பெற்றார். ஆஸி. ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடருக்கு முன்னதாக நடக்கும் இப்போட்டியின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நேற்று களமிறங்கிய  லெய்லா (24வது ரேங்க்) 6-3, 6-4 என்ற நேர் செட்களில் எகடரினா அலெக்சாண்ட்ரோவாவை (34வது ரேங்க்) வீழ்த்தினார்.இப்போட்டி 1 மணி,  17 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. சாக்கரி (கிரீஸ்), தாமரா (ஸ்லோவேனியா), ரிபாகினா (கஜகஸ்தான்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறிய நிலையில், செக் குடியரசின்  குவித்தோவா (17வது ரேங்க்)  7-6 (6-4), 5-7, 2-6 என்ற செட் கணக்கில் ஆஸி. வீராங்கனை  பிரிஸ்சில்லா ஹோனிடம் (263 ரேங்க்) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 20 நிமிடத்துக்கு நீடித்தது.

AIARA

🔊 Listen to this அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்டு  சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியின் 2வது சுற்றில் விளையாட, கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் தகுதி பெற்றார். ஆஸி. ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடருக்கு முன்னதாக நடக்கும் இப்போட்டியின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நேற்று களமிறங்கிய  லெய்லா (24வது ரேங்க்) 6-3, 6-4 என்ற நேர் செட்களில் எகடரினா அலெக்சாண்ட்ரோவாவை (34வது ரேங்க்) வீழ்த்தினார்.இப்போட்டி 1 மணி,  17 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. சாக்கரி (கிரீஸ்),…

Leave a Reply

Your email address will not be published.