அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போபண்ணா – ராம்குமார் சாம்பியன்

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போபண்ணா – ராம்குமார் சாம்பியன்

  • 5

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்-1 தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் ரோகன் போபண்ணா – ராம்குமார் ராமநாதன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.இறுதிப் போட்டியில் குரோஷியாவின் இவான் டோடிக் – மார்செலோ மெலோ (பிரேசில்) முதல் நிலை ஜோடியுடன் நேற்று மோதிய இந்திய இணை 7-6 (8-6), 6-1 என்ற நேர் செட்களில் அபாரமாக வென்று கோப்பையை முத்தமிட்டது. ஆஷ்லி அசத்தல்: இதே தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்டி 6-3, 6-2 என்ற நேர் செட்களில் எலனா ரிபாகினாவை (கஜகஸ்தான்) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். ஹாலெப் சாம்பியன்: மெல்போர்ன் சம்மர் செட்-1 தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குடெர்மடோவாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். இப்போட்டி 1 மணி, 14 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. பட்டம் வென்றார் நடால்: மெல்போர்ன் சம்மர் செட் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் 7-6 (8-6), 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் மேக்சிம் கிரெஸ்ஸியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். இப்போட்டி 1 மணி, 44 நிமிடத்துக்கு நீடித்தது. நடால் 2004ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு ஏடிபி டூர் லெவல் போட்டியில் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

🔊 Listen to this அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்-1 தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் ரோகன் போபண்ணா – ராம்குமார் ராமநாதன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.இறுதிப் போட்டியில் குரோஷியாவின் இவான் டோடிக் – மார்செலோ மெலோ (பிரேசில்) முதல் நிலை ஜோடியுடன் நேற்று மோதிய இந்திய இணை 7-6 (8-6), 6-1 என்ற நேர் செட்களில் அபாரமாக வென்று கோப்பையை முத்தமிட்டது. ஆஷ்லி அசத்தல்: இதே தொடரின் மகளிர் ஒற்றையர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *