அடிபம்ப்பை அகற்றாமல் தார்ச்சாலை; வைரலான வீடியோ! – நடவடிக்கை எடுத்த நகராட்சி

  • 11

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் இருக்கின்றன. இதில், 8-வது வார்டு பகுதியில் ஹவுசிங் போர்டு குடியிருப்பு அருகே, ராசிபுரம் – புதுப்பாளையம் செல்லும் சாலையோரத்தில் அடிபம்ப் ஒன்று இருக்கிறது. இந்த அடிபம்ப்பை இந்தப் பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாகக் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த அடிபம்ப் செயல்படவில்லை.

அடிபம்பை சுற்றி தார்சாலை

Also Read: நாமக்கல்: விவசாய தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம்! – போலீஸார் தீவிர விசாரணை

தண்ணீர் வராததால் மக்கள் குடிதண்ணீர் கிடைக்காமல் அல்லல்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. `இந்த அடிபம்ப்பை சரிசெய்து பழையபடி தண்ணீர் வரவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் இந்த அடிபம்ப்பை அகற்றுங்கள்’ என்று அந்தப் பகுதி மக்கள், ராசிபுரம் நகராட்சி நிர்வாகத்துக்குத் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.

ராசிபுரம்

ஆனால், நகராட்சி நிர்வாகம் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்த நிலையில், பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளுக்காகத் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாகக் கிடக்கும் நகராட்சிகளின் பெரும்பாலான சாலைப்பகுதிகளில் தற்போது புதிய தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 8-வது வார்டில் உள்ள அடிபம்ப்பை அகற்றாமலும், அதைச் சரிசெய்து பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்தாமலும் அப்படியே தார்ச்சாலை அமைத்தனர். அடிபம்ப்பை அகற்றாமல் தார்ச்சாலை அமைத்த நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். அடிபம்ப் வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதைத்தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் தற்போது அந்த அடிபம்ப்பை அகற்றியிருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், “அந்தப் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில், நகராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்குடன் அந்த பம்ப்பை சரிசெய்யாமல் அப்படியே தார்ச்சாலை அமைத்தது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. பகுதி மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வழியாக ஓரளவு தண்ணீர் வழங்கப்பட்டு வந்தாலும் கூட, சாலையோரங்களில் விபத்து ஏற்படும் வகையில் இந்த அடிபம்ப் இருந்தது.

அடிபம்பை சுற்றி தார்சாலை

அதை அகற்றாமல் தார்ச்சாலையை அமைத்ததால், விபத்துகள் ஏற்படும் என்று வலியுறுத்தினோம். இந்த நிலையில், வீடியோவும் வைரலாக, அடிபம்ப்பை அகற்றியிருக்கின்றனர். ஆனால், இந்தப் பகுதி மக்களுக்கு போதிய குடிதண்ணீர் கிடைப்பதில்லை. அதனால், அதன் அருகில் புது அடிபம்ப்பை அமைத்துத் தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து, ராசிபுரம் நகராட்சி தரப்பில் கேட்டபோது, “தார்ச்சாலை அமைக்க கான்ட்ராக்ட் எடுத்தவர்கள், அதை அகற்றவில்லை. மக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த அடிபம்ப் அகற்றப்பட்டது. விரைவில் குடிநீருக்கு மாற்று ஏற்பாடு செய்து தரப்படும். மக்கள் கவலைகொள்ளத் தேவையில்லை” என்றார்கள்.

🔊 Listen to this நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் இருக்கின்றன. இதில், 8-வது வார்டு பகுதியில் ஹவுசிங் போர்டு குடியிருப்பு அருகே, ராசிபுரம் – புதுப்பாளையம் செல்லும் சாலையோரத்தில் அடிபம்ப் ஒன்று இருக்கிறது. இந்த அடிபம்ப்பை இந்தப் பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாகக் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த அடிபம்ப் செயல்படவில்லை. அடிபம்பை சுற்றி தார்சாலை Also Read: நாமக்கல்: விவசாய தோட்டத்தில்…

🔊 Listen to this நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் இருக்கின்றன. இதில், 8-வது வார்டு பகுதியில் ஹவுசிங் போர்டு குடியிருப்பு அருகே, ராசிபுரம் – புதுப்பாளையம் செல்லும் சாலையோரத்தில் அடிபம்ப் ஒன்று இருக்கிறது. இந்த அடிபம்ப்பை இந்தப் பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாகக் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த அடிபம்ப் செயல்படவில்லை. அடிபம்பை சுற்றி தார்சாலை Also Read: நாமக்கல்: விவசாய தோட்டத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *