அடங்காத அன்னலெட்சுமியின் `விருமாண்டி’; 21 காளைகளை அடக்கிய பிரபாகரன்- பாலமேடு ஜல்லிக்கட்டு ஒரு பார்வை

  • 61

பொங்கல் என்றாலே அனைவருக்கும் ஜல்லிக்கட்டு போட்டி நினைவுக்கு வரும். மதுரையின் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் வருடந்தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த வருடம் நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 700 மாடுகளும், 300 மாடு பிடி வீரர்களும் களமிறங்குகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. கொரோனா பரிசோதனை செய்த மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 7 சுற்றுகள் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மொத்தம் 704 காளைகள் சீறிப் பாய்ந்தன. அவற்றை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். இன்றைய போட்டியில் ஆள்மாறி விளையாடி குற்றச்சாட்டு தொடங்கி அன்னலெட்சுமியின் `விருமாண்டி’ காளை வரை பல சுவாரஸ்யங்கள் இடம்பெற்றன.

பாலமேடு

இன்றைய போட்டியின் போது வேறு ஒருவரின் அடையாள அட்டையுடன் விளையாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையில் இன்றைய ஆட்டத்தின்போது, அன்னலெட்சுமியின் காளையான விருமாண்டி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.

யாருக்கும் பிடிகொடுக்காமல் சீறிப்பாய்ந்த காளைக்கு பரிசு வழங்க உரிமையாளரை அழைத்தபோது அன்னலெட்சுமி வந்து பரிசு பெற்றார் அவரை அனைவரும் பாராட்டினர்.

மற்றொரு காளை வாடிவாசலில் இருந்து கிளம்பியபோது துள்ளிகுதித்து ஓடியது. மாடுபிடி வீரர்கள் யாரும் அந்த காளையை நெருக்க முடியவில்லை. சீறிப் பாய்ந்து சீற்றத்துடன் பாய்ந்த காளை, யாருக்கும் பிடிபடாமல் மாடுபிடி வீரர்களைக் கடந்து தனது உரிமையாளரைக் கண்டதும் வேகம் குறைந்து நின்றது.

தனது உரிமையாளரை வாஞ்சையுடன் பார்த்தது. அவரும் அந்த காளையின் கழுத்தில் கயிறை கட்டி கூட்டிச் சென்றார். சற்று நேரத்திற்கு முன்பு அனல் பறக்க பாய்ந்து வந்த காளையா இது என ஆச்சர்யப்பட்டனர் அங்கிருந்த வீரர்கள். வர்ணணையாளர்கள் காளையையும் அதன் உரிமையாளரையும் புகழ்ந்தனர்

இந்த வருடம் ஜல்லிக்கட்டில் பங்கேற்று அதிக காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

பிரபாகரன்

அதன்படி, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வென்ற கார்த்திக் என்ற இளைஞருக்கு கார் வழங்கப்பட்டது. அதேபோல பாலமேடு ஜல்லிக்கட்டிலும் 21 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு கார் பரிசாக அறிவிக்கப்பட்டது.

AIARA

🔊 Listen to this பொங்கல் என்றாலே அனைவருக்கும் ஜல்லிக்கட்டு போட்டி நினைவுக்கு வரும். மதுரையின் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் வருடந்தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த வருடம் நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 700 மாடுகளும், 300 மாடு பிடி வீரர்களும் களமிறங்குகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. கொரோனா பரிசோதனை செய்த மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.…

Leave a Reply

Your email address will not be published.