அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவில் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை: ஓபிஎஸ் வலியுறுத்தல்

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவில் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவில் வேலைவாய்ப்பு என்று கூறி கிராமப்புற இளைஞர்களை குறிவைத்து மோசடி நடைபெறுவதை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. மாநில ஒருங்கிணைப்பாளர், தலைமை ஆய்வு அலுவலர் என இல்லாத பணிகளுக்கு ஆள் எடுக்கும் பணியை மோசடி கும்பல் மேற்கொண்டு வருவதாகவும், இதற்கென தனித் தேர்வு நடத்தி நேர்காணல் நடத்தப்படுவதாகவும், இது குறித்து விண்ணப்பதாரர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு தெற்கு மண்டல அலுவலகத்தைக் கேட்பதாகவும் கூறப்படுகிறது. இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பவர்கள் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், சேலம், மதுரை, கோவை மாவட்ட இளைஞர்களை குறிவைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனவே தமிழ்நாடு முதல்வர் இந்த விவகாரத்தில் தக்க கவனம் செலுத்தி, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு அளித்துள்ள புகாரின் அடிப்படையில் தீர விசாரித்து, மோசடியில் ஈடுபட்டவர்களை சட்டப்படி தண்டிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குரிய பணம் அவர்களுக்குக் கிடைக்கவும், இதுபோன்ற புகார்கள் இனி வராத வண்ணம் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

AIARA

🔊 Listen to this சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவில் வேலைவாய்ப்பு என்று கூறி கிராமப்புற இளைஞர்களை குறிவைத்து மோசடி நடைபெறுவதை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. மாநில ஒருங்கிணைப்பாளர், தலைமை ஆய்வு அலுவலர் என இல்லாத பணிகளுக்கு ஆள் எடுக்கும் பணியை மோசடி கும்பல் மேற்கொண்டு வருவதாகவும், இதற்கென தனித் தேர்வு நடத்தி நேர்காணல் நடத்தப்படுவதாகவும், இது குறித்து விண்ணப்பதாரர்கள்…

Leave a Reply

Your email address will not be published.